புதன், 25 பிப்ரவரி, 2015

ஆனந்தமாலை


ஐயன் மாணிக்கவாசகர் அருளிய ஆனந்த மாலையிலிருந்து ஒரு மலர்.....

பாடல் 
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை  உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே.  

பொருள்:

மாதேவரே! பிறையணிந்த மறையே! என் சிற்றறிவிற்கு எட்டாத, என்னால் அறிய முடியாத பதவியை யானறியாமலே ஈந்தீர்....கற்பூர வாசனை அறியா இக்கடையேன் அதை அறியாமல்...உம் கருணை மழையாய் பொழிந்தும் அதில் நனையா நாயாய் கெட்டேன்.......உம்மால் எனக்கு ஒரு குறையொன்றுமில்லை (நீர் இருக்க குறை அண்டுமா?)...உம்மை விட்டால் எம்மை அடிமை கொள யாருளர்?....எப்பொழுதும், என்றும், எங்கும் உம் நாமம் உரைக்கும் சிவனடியார்களாகிய உமது பரம பக்தர்களுடன் யான் கூடவில்லை...ஆதலால் ஆசைக்கடலில் உழன்று நோய்களுக்கு விருந்தாக இங்கு இருந்தேன்....அடியார் திருவடி....ஆண்டவன் திருவடி என உணர்ந்தேன்...