மீண்டும் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு...ஆலவாய் அண்ணலாம்...சொக்கநாதர் அருள்புரியும்.....அங்கையர்கண்ணி மீனாட்சி ஆட்சி புரியும் நான்மாடக் கூடலாம் மதுரை மாநகரிலிருந்து எம் பணியை தொடர்கிறேன்.....நம் பழவினைகள் வலிமை பெற பாராயணம் செய்து பயனுறுவோம்....
பாடல்:
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே
பொருள்:
இம்மையில் நன்மை பெற தேவையான பொருட்செல்வமாய் இருப்பவளே!...அந்தப் பொருட்களினால் உண்டாகும் சுகமாகிய பொகங்களாகவும் இருப்பவளே!....அதுமட்டுமில்லாமல் அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மதிமயக்கமாகவும் இருப்பவளே!...அது மட்டுமா....அந்த மயக்கத்திலிருந்து எம்மை துய்க்கும் தெளிவாகவும் இருப்பவளே!....அன்னையே...என் மனத்தை வஞ்சிக்கும் மாய இருளை அகற்றும் ஒளி வெள்ளமாக உனது அருளை வாரி வழங்கும் மாரியே!....உன்னருளை விவரிக்க சொல்லொன்று அறியேன் நான்...கமலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அபிராமி அம்பிகையே....
பொருள் - போகம் - மருள் - அருள் -தெளிவு...எல்லாம் நீயே......
கூடல் குருமணியை கருவிழியில் சுமக்கும் ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக