இம்மை மற்றும் மறுமையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த தீமைகள் விலக பாராயணம் செய்ய வேண்டிய பாடல்......
பாடல்
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பொருள்:
தானவரும் ஆனவரும் போற்றும் அழகிய பொற்பாதங்களில் ஜொலிக்கும் சிலம்பணிந்த செம்பவளமேனியளே! பாசம் மற்றும் அங்குசம் எனும் ஆயுதங்களை ஏந்தி....எம்மேல் தளரா பாசம் கொண்டு யானைபோன்ற எம் துன்பத்தை விரட்டும் அங்குசமாக இருப்பவளே! ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை கொண்டவளே!...அந்த பஞ்ச பாணங்களின் மூலம் எமது ஐம்புலன் சுத்திக்கு வித்திடுபவளே!.... கன்னலினும்... தேனினும்... பாலினும்... இனிய மொழிகளைக் கொண்டு...மூவுலகிலும் அழகில் தனக்கொப்பு இல்லா தன்னிகரற்ற சுந்தரியே!...சிந்தூரம் போல் சிவந்த மேனியளே!....எண்ணத்தில் கபடும் தீதும் கொண்ட அசுரர்கள் பயந்து நடுங்கி, அஞ்சி ஒடுங்குமாறு...மஹாமேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கரங்கள் கொண்ட ஆடல் அரசன்....எரியும் தனல் அங்கை ஏந்தி....காட்டாடும் நாட்டான்.....நெருப்பு நிறமாய்....நெருப்பாய் நிற்கும் எம் ஈசனின் இடப்பாகத்தில் ஈஸ்வரியாய் இருந்தவளே!.....எம் தீமைகள் ஒழிய எமைக் காப்பாய்....
கயிலையான் நாமம் நாளும் பயிலும் - மரு. ஜெ. சூரியா.