எனக்குப் பிடித்த பாடல்...
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடலை பொருளுணர்ந்து சொல்லி அருள் மழையில் நனைவோம்.
முத்தணி கொங்கைகள் ஆட ஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
பொருள்:
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தனங்கள் ஆடவும், அடர்ந்த கருமையான கூந்தலில் உள்ள வண்டினங்கள் ஆடவும், சிவந்த மீன் போன்ற கண்கள் பணித்து ஆடவும், சிந்தனை முழுதும் சிவன் மேல் வைத்து ஆடவும், இப்பிறவி யாரோடு ஆடினாலும் பேரன்பினை மட்டும் சிவன் மேல் வைத்து ஆடவும், அந்த சிவபுரத்தரசன் நம்மேல் கருணை வைத்து ஆடவும் நாம் வாசமிகு பொற் சுண்ணம் இடிப்போமாக
இவன் - அவன் - எல்லாமே சிவன் எனும் சூரியா
மாணிக்கவாசகர் மார்கழி மாதத்தில் திருவண்ணாமலைக்கு வந்த போது பெண்கள் வண்ணக்கோலங்கள் இட சுண்ணம் இடிப்பதை பார்த்து பாடிய பாடல் என்று நினைக்கிறேன்...அருமை !
பதிலளிநீக்குkalakkunga
பதிலளிநீக்குநன்றி பிரியா.....உங்கள் பின்னூட்டங்கள் எமக்கொரு உந்து சக்தி.....
பதிலளிநீக்கு