பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை...அருளொடு பொருள் சேர.....நவமணிகள் பெற்று நலமாய் வாழ பாராயணம் செய்வோம்.....
பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
பொருள் :
தாயே, அடி முதல் நுனி வரை சுவை தரும் உனது நாமத்தை போன்ற கரும்பையும், வாசம் வீசும் மலர்களையும் உனது கனகக் கரங்களில் அணிந்து அவைகளுக்கு அணி சேர்க்கின்றாய். செந்தாமரை போன்ற நின் செந்தூர மேனியில் வெண்ணிறத்தில் ஜொலிக்கும் முத்துமாலைகளை அணிந்துள்ளாய்....திருநீலகண்டனின் கண்டத்தை சுற்றி படமெடுக்கும் கொடும் நஞ்சுடை நாகப்படம் போன்ற உன் மெல்லிடையில் நாக மாணிக்கம் போன்ற விலை மதிப்பற்ற நவரத்தின மணிகளையும், பார்த்தவர் கண்கவர் வண்ணப்பட்டாடையும் அணிந்துள்ளாய்...எட்டுத் திசைகளையும் அவற்றை ஆளும் அஷ்ட திக்பாலர்களான கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு- ஈசான்யன் எனும் தேவர்களையும் தனது உடமையாக அணிந்து, சகல செல்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள என்னப்பன் ஆலவாயனின் இடப்பாகம் சேர்ந்து பாகம் பிரியாளாய் பக்தர்களின் சோகம் களைகின்றாய்....
முப்புறமெரித்தானை முக்கண்ணனை முந்தைவினை ஓய்வோனை முக்காலமும் நினைந்துருகும் - மரு. ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக