அன்னையே.. எல்லாம் நின் செயல்...நாம் வெறும் கருவி மட்டுமே...இந்தக் கருவி, கருவிகளை திறம்படக் கையாளும் வலிவு பெற இப்பாடலை பாராயணம் செய்து பயனுறுவோம்....
பாடல்
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே
பொருள்:
எம்மை ஆள்வதற்கு உனது கமலம் போன்ற பாதங்கள் உள்ளன... உமது கமலம் போன்ற பாதம் பற்றினால் மூஉலகாளும் பேறு உண்டு.......நீ எம்மை ஆண்டால் யாம் மூஉலகாள்வோம்.....கடமை தவறாத பயங்கரமான பாசக்கயிற்றுடன் துரத்தும் யமனேஸ்வரனிடமிருந்து எம்மைக் காக்க உமது கடைக்கண் பார்வை உண்டு.....மார்க்கண்டேயரைக் காக்க சிவனார் காலசம்ஹார மூர்த்தியாக அவதாரமெடுத்து, யமனை வதைத்து மார்க்கண்டேயரை மீட்டார்....ஆனால் பாவியேனை மீட்க உமது ஒரு சிறிய விழியோர பார்வையே போதுமானது தாயே!......உம் தாள் எம்மை ஆளாமலிருப்பதற்கும், உம் கடைக்கண் பார்வை எம்மேல் படாமலிருப்பதிற்கும் காரணம் நானும் எனது பாவச்செயல்களும் மட்டுமல்ல...பஞ்சமா பாதகங்கள் செய்த போதும் தஞ்சமென்று வந்து விட்டால் தானேற்றுக் காக்கும் எந்தாய் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ காளியம்மனாகிய நீ உமது சேயாகிய எமை மறந்ததும் கூட ஒரு காரணமாகும். அன்று முப்புரம் எரிக்க வில்லேந்தி தன் பார்வையினாலே திரிபுர தகனம் செய்த ருத்ரனின் இடப்பாகம் வாசம் செய்யும் அழகிய ஒளி வீசும் நெற்றியை உடைய அம்பிகையே...உம்மை வணங்குகின்றேன்...
மறையுடையானை தோலுடையானை வார்சடைமேல் வளரும் பிறையுடையானை போற்றி வணங்கும் நெறிவுடையான் - மரு. ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக