உலக பற்றுக்கள் நீங்கி, பக்தியெனும் மணம் பெருகிட பாடுவோம் இந்த பாடலை ....
கண்ணா...இன்னொரு துளி அமுதம் குடிக்க ஆசையா.... அப்படின்னா இதைப் படிச்சுப்பாரு....
பாடல் :
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
பொருள்:
அழகில் சிறந்தவளே! எம்பெருமானுக்கு துணைவியாகவும் என்னுடைய எல்லா செயல்களுக்கும் துணையாகவும் நிற்பவளே! என்னைத் தொடர்ந்து வந்து துன்பங்களைத் தரும் பந்த பாசங்களை அறுப்பவளே! செந்தூரம் அணிந்த சிவந்த வண்ண மேனியளே! எருமை முகம் கொண்ட மகிஷாசூரனை வதைத்து, அவன் தலைமேல் நின்ற துர்க்கையளே! நீல நிறம் கொண்ட காளியாய் நின்றவளே! உலகிற்கே தாயான போதிலும், என்றுமே இந்த சேயின் மேல் குன்றாத இரக்கம் காட்டுவதில் கன்னியளே! வேதங்களை கையில் சுமக்கும் பிரம்மதேவனின் அகந்தையினால், கொய்யப்பட்ட அவரது ஐந்தாவது சிரத்தைக் கையில் கொண்டவளே! உனது மலர் போன்ற பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நிற்குமே!
- தாயுமானவனின் சேயுமானவன் - சூரியா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக