வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நமாவளி


நவராத்திரி ஸ்பெஷல்......லட்சுமி அஷ்டோத்ர சத நமாவளி....படித்துப் பயன்பெறுங்கள்....


1. ஓம் அன்னலட்சுமியே போற்றி
2. ஓம் அதிர்ஷ்டலட்சுமியே போற்றி
3. ஓம் அன்னலட்சுமியே போற்றி
4. ஓம் அபயலட்சுமியே போற்றி
5. ஓம் அலங்காரலட்சுமியே போற்றி
6. ஓம் அஸ்வாரூடலட்சுமியே போற்றி
7. ஓம் அஷ்டபுஜலட்சுமியே போற்றி
8. ஓம் அஷ்டாதசபுஜலட்சுமியே போற்றி
9. ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
10. ஓம் அனந்தலட்சுமியே போற்றி
11. ஓம் ஆதிலட்சுமியே போற்றி
12. ஓம் ஆனந்தலட்சுமியே போற்றி
13. ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
14. ஓம் இந்திரலட்சுமியே போற்றி
15. ஓம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
16. ஓம் ஓங்காரரூபியே போற்றி
17. ஓம் கஜலட்சுமியே போற்றி
18. ஓம் கனகலட்சுமியே போற்றி
19. ஓம் கற்பகலட்சுமியே போற்றி
20. ஓம் கனகாபிஷேகலட்சுமியே போற்றி
21. ஓம் கன்யாலட்சுமியே போற்றி
22. ஓம் காருண்யலட்சுமியே போற்றி
23. ஓம் கிருபாலட்சுமியே போற்றி
24. ஓம் கீர்த்திலட்சுமியே போற்றி
25. ஓம் கோலட்சுமியே போற்றி
26. ஓம் கோலாபுரிலட்சுமியே போற்றி
27. ஓம் சத்யலட்சுமியே போற்றி
28. ஓம் சர்வலட்சுமியே போற்றி
29. ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி
30. ஓம் சந்தானலட்சுமியே போற்றி
31. ஓம் சாந்தலட்சுமியே போற்றி
32. ஓம் சாகரோத்பவலட்சுமியே போற்றி
33. ஓம் சித்தலட்சுமியே போற்றி
34. ஓம் சிவானந்தலட்சுமியே போற்றி
35. ஓம் சுபலட்சுமியே போற்றி
36. ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
37. ஓம் சுவர்ணலட்சுமியே போற்றி
38. ஓம் சுஸ்மிதலட்சுமியே போற்றி
39. ஓம் சுகாசனலட்சுமியே போற்றி
40. ஓம் சௌபாக்யலட்சுமியே போற்றி
41. ஓம் ஸ்திதலட்சுமியே போற்றி
42. ஓம் சௌந்தர்யலட்சுமியே போற்றி
43. ஓம் சுவர்க்கலட்சுமியே போற்றி
44. ஓம் ஸைன்யலட்சுமியே போற்றி
45. ஓம் ஜயலட்சுமியே போற்றி
46. ஓம் ஜகல்லட்சுமியே போற்றி
47. ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
48. ஓம் ஜேஷ்டலட்சுமியே போற்றி
49. ஓம் ஷட்புஜலட்சுமியே போற்றி
50. ஓம் ஷோடசலட்சுமியே போற்றி
51. ஓம் தனலட்சுமியே போற்றி
52. ஓம் தனதலட்சுமியே போற்றி
53. ஓம் தயாலட்சுமியே போற்றி
54. ஓம் தான்யலட்சுமியே போற்றி
55. ஓம் த்ரிகுணலட்சுமியே போற்றி
56. ஓம் த்வாரலட்சுமியே போற்றி
57. ஓம் த்விபுஜலட்சுமியே போற்றி
58. ஓம் த்விபுஜவீரலட்சுமியே போற்றி
59. ஓம் திவ்யலட்சுமியே போற்றி
60. ஓம் தீபலட்சுமியே போற்றி
61. ஓம் தீரலட்சுமியே போற்றி
62. ஓம் தைர்யலட்சுமியே போற்றி
63. ஓம் துளசிலட்சுமியே போற்றி
64. ஓம் துக்கநிவாரணியே போற்றி
65. ஓம் நாகலட்சுமியே போற்றி
66. ஓம் நித்தியலட்சுமியே போற்றி
67. ஓம் பாலலட்சுமியே போற்றி
68. ஓம் பங்கஜலட்சுமியே போற்றி
69. ஓம் பாக்யலட்சுமியே போற்றி
70. ஓம் பிரம்மசோதரியே போற்றி
71. ஓம் பிரசன்னலட்சுமியே போற்றி
72. ஓம் பிரகாசலட்சுமியே போற்றி
73. ஓம் பில்வலட்சுமியே போற்றி
74. ஓம் பூலட்சுமியே போற்றி
75. ஓம் புவனலட்சுமியே போற்றி
76. ஓம் பூஜ்யலட்சுமியே போற்றி
77. ஓம் பூர்ணலட்சுமியே போற்றி
78. ஓம் போகலட்சுமியே போற்றி
79. ஓம் மகாலட்சுமியே போற்றி
80. ஓம் மாயாலட்சுமியே போற்றி
81. ஓம் மோட்சலட்சுமியே போற்றி
82. ஓம் மோஹனலட்சுமியே போற்றி
83. ஓம் யக்ஞ லட்சுமியே போற்றி
84. ஓம் யந்திரலட்சுமியே போற்றி
85. ஓம் யோகலட்சுமியே போற்றி
86. ஓம் யௌவனலட்சுமியே போற்றி
87. ஓம் ராஜலட்சுமியே போற்றி
88. ஓம் ராஜ்யலட்சுமியே போற்றி
89. ஓம் ரம்யலட்சுமியே போற்றி
90. ஓம் ரூபலட்சுமியே போற்றி
91. ஓம் லட்சுமியே போற்றி
92. ஓம் லங்காதகனியே போற்றி
93. ஓம் வரலட்சுமியே போற்றி
94. ஓம் வரதலட்சுமியே போற்றி
95. ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
96. ஓம் விஜயலட்சுமியே போற்றி 
97. ஓம் விஸ்வலட்சுமியே போற்றி
98. ஓம் வித்யாலட்சுமியே போற்றி
99. ஓம் வீரலட்சுமியே போற்றி
100. ஓம் வீர்யலட்சுமியே போற்றி
101. ஓம் ஞானலட்சுமியே போற்றி
102. ஓம் ஹம்ஸவாஹினியே போற்றி
103. ஓம் ஹ்ருதயலட்சுமியே போற்றி
104. ஓம் ஹிரண்யலட்சுமியே போற்றி
105. ஓம் ஸ்ரீ லட்சுமியே போற்றி
106. ஓம் ஸ்ரீ சக்ரலட்சுமியே போற்றி
107. ஓம் ஸ்ரீ சூக்தநாயகியே போற்றி
108. ஓம் ஸ்ரீ ப்ராதானலட்சுமியே




குரு அர்ச்சனை...


அன்பர்களே!
தமிழில் அஷ்டோத்ர சதநமாவளிகள் வரிசையில் இன்று குருபவானுக்குரிய தமிழ் 108 போற்றி மந்திரங்கள்....வியாழன் தோறும் இதை பாராயணம் செய்து குருவருள் பெறுங்கள்...

நவக்கிரகதலங்களும் வழிபாடும் எனும் 1991ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து மக்கள் பயனுற இதைக் கொடுக்கிறேன். 



1. ஓம் அன்னவாகனனே போற்றி
2. ஓம் அங்கிரஸ புத்திரனே போற்றி
3. ஓம் அபய கரத்தனே போற்றி
4. ஓம் அரசு சமித்தனே போற்றி
5. ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
6. ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
7. ஓம் அறிவனே போற்றி
8. ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
9. ஓம் அறக்காவலே போற்றி
10. ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி
11. ஓம் ஆண்கிரகமே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் இந்திரன் ப்ரயத்தி தேவதையனே போற்றி
14. ஓம் இருவாகனனே போற்றி
15. ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
16. ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
17. ஓம் உதித்யன் சோதரனே போற்றி
18. ஓம் உபகிரகமுடையவனே போற்றி
19. ஓம் எண்பரித்தேரனே போற்றி
20. ஓம் எளியோர்க்காவலே போற்றி
21. ஓம் ஐந்தாமவனே போற்றி
22. ஓம் ஏடேந்தியவனே போற்றி
23. ஓம் கருணை உருவே போற்றி
24. ஓம் கற்பகத்தருவே போற்றி
25. ஓம் கடலை விரும்பியே போற்றி
26. ஓம் கமண்டலதாரியே போற்றி
27. ஓம் களங்கமிலானே போற்றி
28. ஓம் கசன் தந்தையே போற்றி
29. ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
30. ஓம் கடகராசியதிபதியே போற்றி
31. ஓம் கார்ப்புச்சுவையனே போற்றி
32. ஓம் காக்கும் தேவனே போற்றி
33. ஓம் கிரகாதீசனே போற்றி
34. ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
35. ஓம் குருவே போற்றி
36. ஓம் குருபரனே போற்றி
37. ஓம் குணசீலனே போற்றி
38. ஓம் குருபகவானே போற்றி
39. ஓம் சதுரபீடனே போற்றி
40. ஓம் சஞ்சீவினி யறிந்தவனே போற்றி
41. ஓம் சான்றோனே போற்றி
42. ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
43. ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
44. ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
45. ஓம் சுராச்சரியனே போற்றி
46. ஓம் சுப கிரகமே போற்றி
47. ஓம் செல்வமளிப்பவனே போற்றி
48. ஓம் செந்தூரில் உய்பவனே போற்றி
49. ஓம் தங்கத்தேரனே போற்றி
50. ஓம் தனுர்ராசி யதிபதியே போற்றி
51. ஓம் தாரை மணாளனே போற்றி
52. ஓம் த்ரிலோகேசனே போற்றி
53. ஓம் திட்டைத் தேவனே போற்றி
54. ஓம் தீதழிப்பவனே போற்றி
55. ஓம் தூயவனே போற்றி
56. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
57. ஓம் தெளிவிப்பவனே போற்றி
58. ஓம் தேவகுருவே போற்றி
59. ஓம் தேவரமைச்சனே போற்றி
60. ஓம் தேவர்குலக் காவலனே போற்றி
61. ஓம் நற்குணனே போற்றி
62. ஓம் நல்லாசானே போற்றி
63. ஓம் நற்குரலோனே போற்றி
64. ஓம் நல்வாக்கருள்வோனே போற்றி
65. ஓம் நலமேயருள்பவனே போற்றி
66. ஓம் நாற்சக்கரத்தேரனே போற்றி
67. ஓம் நாற்கோணப்பீடனே போற்றி
68. ஓம் நாற்கரனே போற்றி
69. ஓம் நீதிகாரனே போற்றி
70. ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி
71. ஓம் நேசனே போற்றி
72. ஓம் நெடியோனே போற்றி
73. ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
74. ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
75. ஓம் பிரஹஸ்பதியே போற்றி
76. ஓம் பிரம்மன் பெயரனே போற்றி
77. ஓம் பீதாம்பரனே போற்றி
78. ஓம் புத்ர காரகனே போற்றி
79. ஓம் புனர்வசு நாதனே போற்றி
80. ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
81. ஓம் பூரட்டாதிபதியே போற்றி
82. ஓம் பொற்பிரியனே போற்றி
83. ஓம் பொற்குடையனே போற்றி
84. ஓம் பொன்னாடையனே போற்றி
85. ஓம் பொன்மலர்ப்பிரியனே போற்றி
86. ஓம் பொன்னிறத்வஜனே போற்றி
87. ஓம் மணம் அருள்பவனே போற்றி
88. ஓம் மகவளிப்பவனே போற்றி
89. ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
90. ஓம் மமதை மணாளனே போற்றி
91. ஓம் முல்லைப்பிரியனே போற்றி
92. ஓம் மீனராசியதிபதியே போற்றி
93. ஓம் யானை வாகனனே போற்றி
94. ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
95. ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
96. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
97. ஓம் வடதிசையனே போற்றி
98. ஓம் வடநோக்கனே போற்றி
99. ஓம் வள்ளலே போற்றி
100. ஓம் வல்லவனே போற்றி
101. ஓம் வச்சிராயுதனே போற்றி
102. ஓம் வாகீசனே போற்றி
103. ஓம் விசாகநாதனே போற்றி
104. ஓம் வேதியனே போற்றி
105. ஓம் வேகச்சுழனோனே போற்றி
106. ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
107. ஓம் ஹ்ரீம்பீஜமந்திரனே போற்றி
108. ஓம் வியாழனே போற்றி


குருவடி திருவடி தன்முடி தாங்கும் - மரு ஜெ சூரியா





புதன், 26 செப்டம்பர், 2012

தீமைகள் ஒழிய...



இம்மை மற்றும் மறுமையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த தீமைகள் விலக பாராயணம் செய்ய வேண்டிய பாடல்......



பாடல்
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

பொருள்:
தானவரும் ஆனவரும் போற்றும் அழகிய பொற்பாதங்களில் ஜொலிக்கும் சிலம்பணிந்த செம்பவளமேனியளே! பாசம் மற்றும் அங்குசம் எனும் ஆயுதங்களை ஏந்தி....எம்மேல் தளரா பாசம் கொண்டு யானைபோன்ற எம் துன்பத்தை விரட்டும் அங்குசமாக இருப்பவளே! ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை கொண்டவளே!...அந்த பஞ்ச பாணங்களின் மூலம் எமது ஐம்புலன் சுத்திக்கு வித்திடுபவளே!.... கன்னலினும்... தேனினும்... பாலினும்... இனிய மொழிகளைக் கொண்டு...மூவுலகிலும் அழகில் தனக்கொப்பு இல்லா தன்னிகரற்ற சுந்தரியே!...சிந்தூரம் போல் சிவந்த மேனியளே!....எண்ணத்தில் கபடும் தீதும் கொண்ட அசுரர்கள் பயந்து நடுங்கி, அஞ்சி ஒடுங்குமாறு...மஹாமேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கரங்கள் கொண்ட ஆடல் அரசன்....எரியும் தனல் அங்கை ஏந்தி....காட்டாடும் நாட்டான்.....நெருப்பு நிறமாய்....நெருப்பாய் நிற்கும் எம் ஈசனின் இடப்பாகத்தில் ஈஸ்வரியாய் இருந்தவளே!.....எம் தீமைகள் ஒழிய எமைக் காப்பாய்....

கயிலையான் நாமம் நாளும் பயிலும் - மரு. ஜெ. சூரியா.

திங்கள், 10 செப்டம்பர், 2012

சனிப்பெயர்ச்சியால் நேரும் இன்னல்களிலிருந்து விடுபட.....



திருஞானசம்பந்தர் இயற்றிய திருநள்ளாற்றுப்பதிகத்தை ஓதி, உணர்ந்து சனிபகவானின் அருள் பெறுவோம்... பச்சைத்திருப்பதிகம் - இஃது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது வேகாதிருந்தது.

திருநள்ளாற்றுப்பதிகம்

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.

அடியார்க்கடியான் - மரு ஜெ. சூரியா

சனி, 1 செப்டம்பர், 2012

திருப்பாணாழ்வார் வரலாறு...



இறைவன் மிகப்பெரியவன்...பாகுபாடற்றவன் என்பதை மனித குலத்திற்கு உணர்த்த செய்த திருவிளையாடல்களில் ஒன்று திருப்பாணாழ்வார் வரலாறு. 
இந்த மாலையின் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மணம் வீசும் வலைப்பூவிலிருந்து பறிக்கப்பட்டது...மாலையாக்கி அரங்கனுக்கு சூட்டியது மட்டுமே அடியேன் கைங்கர்யம்...

பயோ-டேட்டா
பெயர் : திருப்பாணாழ்வார்
காலம் -8ம் நூற்றாண்டு ( 750 - 780 கி.பி.)
மாதம் - கார்த்திகை
திருநட்சத்திரம் - கார்த்திகை
ஊர் - உறையூர்.

பன்னிரு ஆழ்வார்களில் பதினோராவது ஆழ்வார்...

வேறு பெயர்கள்
பாணர் ,முனிவாகனர் ,யோகி – வாஹனர் ,கவீஸ்வரர்

அம்சம் - ஸ்ரீவத்சம் (ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இருக்கும் மச்சம்)



திருப்பாணாழ்வார் திருச்சி உறையூருக்கு அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த, பாணர் என்னும் தீண்டத்தகாத இனத்தைச் சேர்ந்த, ஒரு தம்பதியரால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. பாணர் என்பவர்கள் பாண் என்னும் இசைக்கருவியினால் இறைவனையும், மன்னனையும்பற்றி இனிமையான பாடல்களைப் பாடி, கேட்போர் அனைவரையும் அகிலம் மறக்கச் செய்வர். அப்படிப்பட்ட ஒரு பாணர் எப்படி ஆழ்வார் ஆனார் என்பதே இக்கதை....


திவ்ய தேசங்களில் தலையாயதாக விளங்கும், திருவரங்கம் காவேரித் தாயின் கரையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில், காவிரியின் மறுகரைக்கு, அதாவது அரங்கன் அருள் பாலிக்கும் திருத்தலத்திற்கு, பாணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை. அதனால், தினமும் மறுகரையில் நின்று கொண்டே, மாலவனை மனதிற்குள்ளேயே நினைத்து மதுரமான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியிலே பாடிப் பாடி பரவசம் கொள்வார். 
ஒருநாள் வழக்கம் போல் ஆழ்வார் தன்னை மறந்து அரங்கனை அந்தரங்கமாய் தரிசித்துக் கொண்டிருந்த வேளையில், திருவரங்கத்தின் அர்ச்சகர் இலோக சாரங்க முனி என்பவர், திருவரங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்பொழுது, திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல், சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக பல முறை, அந்த அர்ச்சகர் அவரை விலகச் சொல்லி கடிந்து கொண்டார்.

ஆனால், திருப்பாணாழ்வார் பக்தியில் மூழ்கியிருந்த படியால் அவர், அந்த அர்ச்சகர் அழைத்ததை அறியவில்லை. எனவே, கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார். பாணர் நெற்றியில் இரத்தம் வழிந்தது. பாணர் கண்களைத் திறந்து பார்த்தார். ‘ஐயோ, அரங்கனுக்குத் திருமஞ்சனம் கொண்டு செல்லும் இம்முனிவரின் கைங்கர்யத்துக்குத் தடங்கலாக இருந்து விட்டோமே’ என்று வருந்தி விலகிச் சென்றார்.. 



பிறகு திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக்கொண்டு, குடை, சாமரம், மேளதாளங்களோடு கோவில் சன்னதிக்குச் சென்றார் லோகசாரங்கர். அங்கே கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. திருவரங்கனின் திருநெற்றியில், அதாவது எந்த இடத்தில் திருப்பாணாழ்வாருக்கு அடிப்பட்டதோ அந்த இடத்தில் இறைவனுக்கு இரத்தம் கசிந்தது. பெருமாளின் திருமுக மண்டலத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லோகசாரங்கர் பெருமானின் நிலைகண்டு பதறினார்.  மிகுந்த மனப் பாரத்துடன் வீடு திரும்பினார். இரவு முழுதும், தான் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டதாய் பரிதவித்த அர்ச்சகரால் உறங்க முடியவில்லை. அன்று இரவே, திருவரங்கப் பெருமாள் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'திருப்பாணாழ்வாரை உன் தோளில், அவர் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் ஏற்றிக் கொண்டு வா! இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்' என்று கூறினார்.

மறுநாள் காலையிலேயே, திருப்பாணாழ்வாரிடம் சென்று, நடந்தவற்றைக் கூறி அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால், திருப்பாணாழ்வாரோ, தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவர். தங்கள் தோளில் நான் செல்வது சரியாகாது' என்று மிகவும் பிடிவாதமாக மறுத்தார். ஆனாலும் அர்ச்சகர் விடாபிடியாக அவரைத் தன் தோள் மேல் தூக்கி வைத்துக் கொண்டு, திருவரங்கக் கோயிலுக்குள் சென்றார். அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் அதிசயித்துப் போயினர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்ததும், தன் தோளில் இருந்து ஆழ்வாரை இறக்கிவிட்ட அர்ச்சகர், ஒரு ஓரமாக பணிவாக நின்று நடப்பதை எல்லாம் கவனித்தார். கோயிலில் முதல் முறையாக கால் வைத்த திருப்பாணாழ்வார், கருவறையில் அவர் முதன் முதலில் கண்டது, இறைவனின் திருப்பாதம் தான்.

அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார். அத்துடன் அவர் நின்று விட வில்லை. தன் கண்ணால் கண்டு, உயிருருக அனுபவித்த இன்பத்தை, பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி(தொப்புள்), திருமார்பு, கண்டம்(கழுத்து), பவளவாய், கமலக்கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரான்... என்று துவக்கத்தில் வைத்துப் பாடி பரவசமடைந்தார். 
ஒவ்வொரு பாசுரத்திலும் பெருமானின் ஓர் அங்கத்தின் அழகை வருணிக்கிறார். இவர், இறைவனைக் கண்ட பொழுதிலேயே, தன் ஊண் உருக, உயிர் கசிய இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் கண்டு பாடிய பாடல்களே அமலனாதிபிரான் ஆகும். அமலனாதிபிரான், அமுதத்திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக உள்ளது.

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான் எனப்படும் பத்துப் பாடல்கள் இதோ...


1. திருவடி அழகு

அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

பொருள் :
அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி நான் விரும்பாமலே, நான் கேட்கும் முன்பாகவே எனக்கு அருள் செய்தவன். உயர்ந்த மதில்களை உடைய திருவரங்கத்தில் கண்வளரும் அப்பெருமானின் திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்தது போலிருந்தது.
அடியவர்களுக்கு ஆதாரமாயிருக்கும் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டதை முதல் பாசுரத்தில் பேசுகிறார்.

2. பீதக ஆடை அழகு

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

பொருள் :
எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய மனத்தை உடையவன். அண்டங்களைக் கடந்துசெல்லும் உயர்ந்த திருமுடி உடையவன். தன்னை எதிர்த்துவந்த அசுரர்களையெல்லாம் கொடிய அம்புகளால் உயிர் வாங்கிய இராமபிரானாக விளங்குபவன். மணம்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருள்பவன். அப்பெருமானின் திருவரையில் சார்த்திய பீதாம்பரத்தின் மேல் என்சிந்தை சென்றது. முதல் பாசுரத்தில் அவனுடைய திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்ணுள் புகுந்தன என்றார். தலைச்சன் கன்றை ஈன்ற பசு தன் கன்றுக்குட்டிக்குப் பழக்கம் இல்லாததால் முதலில் தானே வலியப்போய் தன் மடுவை கன்றின் வாயில் கொடுக்கும். பால் குடித்துப் பழகியபின் அக்கன்று தாய்ப்பாலின் ருசி அறிந்தபின், தாய்ப்பசு காலாலே உதைத்தாலும் ஓடிச்சென்று பால்குடிக்கும். எம்பெருமானின் திருவடி முதலில் தானே வலியவந்து ஆழ்வாருக்கு அருட்சுவையை ஊட்டியதை முதல் பாடலில் தெரிவிக்கிறார். இப்பாடலில் அருட்சுவைப் பாலின் ருசியறிந்த கன்றைப்போல தனது நெஞ்சு தானே தேடிச் சென்றதைத் தெரிவிக்கிறார்.

3. நாபிக்கமல (உந்தி) அழகு

மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

பொருள் :
திருமலையில் பெண்குரங்குகள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவியபடி இருக்கும். தேவர்கள் பூக்களைக் கொண்டு பெருமாளை
ஆராதனை செய்துகொண்டே யிருப்பார்கள். அப்படி ஆராதனை செய்ய வரும்போது திருமலையின் சிகரங்களில் கொஞ்சம் இளைப்பாறுவார்கள். அவ்வளவு உயர்ந்தமலை அது! அரங்கத்தில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்ட பெருமானுடைய பட்டாடை செவ்வானம் போன்ற நிறமுடையது. பிரமனைப் படைத்த அழகிய நாபிக்கமலமும் செந்நிறப் பீதாம்பரம் இவற்றின்மேல் என் உயிர் படிந்துவிட்டது.

4. உதரபந்தம்

சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

பொருள் :
நாலு பக்கங்களிலும் உயர்ந்திருக்கும் மதில்களல் சூழப்பட்ட இலங்கை மாநகரத்தின் அரசனான இராவணனை முதல்நாள் போரில் தோல்வியுறச்செய்து வெறுங்கையோடு இலங்கைக்கு அனுப்பிவைத்தான் இராமன். அதுமட்டுமல்லாமல் இன்றுபோய் போர்க்கு நாளை வா என்றும் சொன்னான். சீதையை விட்டுவிட மனமில்லாமல் மறுபடியும் போர்செய்ய வந்தவன் தலைகள் பத்தையும் உதிரும்படியாகக் கணைதொடுத்தவன் தலைகளை வெட்டி வீழ்த்த என்று சொல்லாமல் இலேசாக அதிக முயற்சி இல்லாமல் உதிரும்படியாகத் தலைகளை உதிர்த்தான், கணைவிட்டான் என்று நயமாகச் சொல்கிறார். வண்டுகள் இசை பாட, மயில்கள் ஆடும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதன் திருவயிற்றில் அணிந்திருக்கும் உதரபந்தம் என்னும் திருவாபரணம் என் நெஞ்சினுள் எப்போதும் நிலைத்திருக்கும்.

[உதரபந்தம் - அரைஞாண் கயிறு]

5. திருஆர மார்பழகு

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

பொருள் :
என்னுடைய மிகப்பாரமான, சுமக்க முடியாத பாபங்களை என்னிடமிருந்து தொலைத்தான் அதனால் நான் பாபங்களனைத்தும் நீங்கப் பெற்றவனானேன். என்னைத் தன்னிடம் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமா, அரங்கநாதன் என் மனத்தினுள்ளும் வந்து புகுந்து விட்டான். சாதாரணமாகக் கதவை திறந்து வா என்று அழைத்தபின் வருவதற்கும் வந்து புகுவதற்கும் வித்தியாசம் உண்டு. இடித்துத் தள்ளிக்கொண்டு புகுதல். ‘வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக’ என்பார் அபிராமி பட்டர். இப்படி அரங்கநாதன் வந்து என்னுள்புக நான் என்ன தவம் செய்தேனோ!முற்பிறவியில் பெரிய தவத்தைச் செய்திருப்பேனோ?தெரியவில்லை. பிராட்டியும் முத்தாரமும் வீற்றிருக்கும் அந்தத் திருமார்பு என்னை ஆட்கொண்டது.

6. கண்டத்தழகு

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

பொருள் :
வெண்மையான பிறைச்சந்திரனைச் சடையில் தரித்த சிவன், பிரும்ம கபாலத்தில் பிக்ஷை எடுத்துத் திரிந்த பாபத்தைப் போக்கிய பெருமான். வண்டுகள்
வாழும் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்டவன். அண்ட பகிரண்டங்களையும் பூமியையும் ஏழு குலமலைகளையும் அமுது செய்தருளிய
திருக்கழுத்து என்னை சம்சார சாகரத்தில் அகப்படாமல் உய்யக் கொண்டதே!

7. திருவாயழகு

கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

பொருள் :
சுழியை உடைய சங்கையும் அனல் கக்கும் சக்கரத்தையும் தனது திருக்கைகளில் தரித்தபடி இருக்கிறான் அரங்கன். அவன் மேனி நீண்ட மலை போல விளங்குகிறது. மணம் கமழும் துளப மாலைகள் அவனுடைய நீண்ட முடியை அலங்கரிக்கின்றன. என் ஐயன் திருவனந்தாழ்வான்மேல் சயனிப்பவன். அந்த மாயனின் சிவந்த திருவாய், ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்! அந்தச் சிவந்தவாய் என்னை, என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே! பெண்களின் கொவ்வைச் செவ்வாயில் ஈடுபட்டிருந்த என்னைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டதே!

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

பொருள் :
மிகப் பெரிய வடிவோடு தன்னை எதிர்த்து வந்த இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன், பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருப்பவன். எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள். அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன். அவனுடைய திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்துவிட்டன. கல்நெஞ்சனான என்னையும் அவன் கண்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டன.

9. நீலமேனி எழில்

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே

பொருள் :
பிரளய காலத்தில் ஆலமரத்தின் சிறிய இலையிலே தன்னந்தனியே சின்னஞ்சிறு பாலகனாய் பள்ளிகொண்டான். ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றிலே அடக்கியவன். திருவரங்க நகரில் திருவனந்தாழ்வானை அணையாகக் கொண்டு பள்ளிகொண்டவன். அவனுடைய இரத்தின ஆரமும், முத்து மாலையும் எல்லாவற்றுக்கும் மேலாக எல்லைகாண முடியாத அந்த நீலமேனி அழகும், ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்! என் நெஞ்சு பூராவும் வியாபித்து விட்டதே.

10. மற்றொன்றைக் காணாத கண்கள்

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

பொருள் :
நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான். அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன். உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம்போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா? ஆரா அமுதனான அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரையும் (முத்திரை) பாசுரக் கணக்கையும் கூறியதுபோல இவர் தம் பெயரையோ ஊரையோ குறிப்பிட வில்லை. உற்றாரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர் வேண்டேன்’ என்ற மனோபாவம்! அவருடைய கண்ணும் கருத்தும் அரங்கனிடமே, அவன் அழகிலேயே ஈடுபட்டன. அவர் தன்னை மறந்தார். இத்தனை காலமாகக் கோயிலுக்குள்ளே வந்து தரிசிக்க முடியமல் இருந்ததால் இன்று அரங்கநாதனை மிக அருகிலிருந்து தரிசித்த ஆனந்தக் களிப்பில் தன்னையே இழந்தார். தன் நாமமும் கெட்டார், தலைப்பட்டார் தலைவன் தாள். ‘அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்டபின்,உன்னைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்க விரும்புமா?’ என்று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார். காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல, காய்ந்த இரும்பில் விழுந்த நீர் போல ஆழ்வார் அரங்கனோடு ஐக்கியமானார். அமுதமே கிடைத்தபின் பால் எதற்கு? ....



 நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவர் பாடியுள்ளவை பத்துப் பாசுரங்கள் மட்டுமே என்றாலும் அவை ஒவ்வொன்றுமே நல்மாணிக்கங்களக விளங்குகிறது.

தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்த ஒருவரின் பக்திக்கு மெச்சி, எம்பெருமான் அவருக்கு அளித்த சீரும் சிறப்பும் இவ்வுலகில் வேறு எவருக்கும் கிடைக்காத அரிய பாக்கியம். இதிலிருந்து நாம் அறிவது, இறைவனை முழுமனத்துடன் அறிந்தால், அரி அவன் எவருக்கும் அரியவன் அல்ல. எந்த சாதியாயினும், எம்மதமானாலும், எல்லா உயிருக்கும் எவ்வித வேறுபாடுமில்லாமல் அருள் புரிவான் அரங்கன்.

தன்னை முழுமனத்துடன் தருவதே இறைவனுக்கு சிறந்த காணிக்கை, அது யார் வேண்டுமானாலும் தரலாம், வரையறை இல்லாது... என்னை நினைத்து நெகிழ்தலே எனக்கான அபிஷேகம்....என்ற வாக்கிற்கிணங்க....அவனை நினைப்போம்....அரங்கனருள் பெறுவோம்...


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

உலகினை வசப்படுத்த...


உலகம் வசப்பட இப்பாடலை பாராயணம் செய்வோம்..

பாடல்
இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.


பொருள்
அம்மையாகிய உம்மிடத்தில் இருக்கும் பெருமிதத்தால் பருத்தும், ஒன்றுடன் ஒன்று இணையாகவும், தளர்ச்சியின்றி இறுக்கமாகவும், செழித்தும், குழைந்தும், இளகியும், வடம் போன்ற முத்து மாலையை தாங்கியும் உள்ள மலை போன்ற தனங்களைக் கொண்டு....எம் இறைவராம்...எதற்கும் அசராதவராம்....காமனை எரித்தவராம்....
ஈசரின்  வலிமை மிகுந்த நெஞ்சை உம் எண்ணத்திற்கு ஏற்றபடி ஆட்டுவிக்கும் திறம் கொண்ட எம் தாயே...எல்லா நலங்களையும் எமக்கருள்தலையே கொள்கையாகக் கொண்ட நாயகியே....நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே!...இனிமையும் குளுமையும் நிறைந்த சொற்களாலான வேதங்களையே உம் கால் சிலம்பாய் அணிந்துள்ளவளே..
மூவுலகாளும் ஈசரை வசியப்படுத்திய உம் திருமேனி எழில் கண்டால்...இவ்வுலகம் மட்டுமல்ல..மூவுலகமும் வசப்படும்....இது திண்னம்...


கல்யானைக்கு கரும்பு கொடுத்தானுக்கு..சொல்மாலை சூட்டும் - மரு. ஜெ. சூரியா


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நல்லடியார் நட்புப் பெற...


பதினாறு பேறுகளில் கபடு வாராத நட்பும் ஒன்று...அப்படி மனதில் சிறிதும் கபடு அற்றவர்கள் அன்னையின் அடியார்கள்..அந்த நல்லடியார்களின் நட்பை பெற்று நலம் பெற வாழ இப்பாடல் பாடுவோம்...

பாடல்:
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.


பொருள் :
என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே!..இப்போதே மலர்ந்த கருங்குவளை மலர்களையொத்த அழகிய அருள் ததும்பும் விழிகளுடன் உலகைக் காக்கும் ஜகன் மாதாவான அபிராமி அன்னையும்...கறுத்த கழுத்தும், சிவத்த உடலும் கொண்ட செம்பொன் மேனியான்..ஆலவாய் அண்ணலும் சேர்ந்து எம்மை ஆட்கொண்டு அருளும் காரணத்திற்காக மிகவும் விருப்பத்துடன் யாமிருக்கும் இவ்விடம் தேடி வந்ததுடன் அல்லாமல்...எம்மை தம் அடியார் கூட்டத்தின் நடுவே இருக்கச் செய்து...எம்மையும் அடியாராகவே பாவித்து....எம் சிரத்தின் மேல் தம் கமலம் போன்ற பாதம் பதித்திட்டு வீடு, பேறு, முக்தி, மோட்சம் அனைத்தையும் அருளினீர்....இதற்காக என்ன புண்ணியம் செய்துள்ளாய் மனமே....

காமனை எரித்தவனை.....காலனை மிதித்தவனை....காவிய நாயகனை...ஆவியுருக துதிக்கும் - மரு. ஜெ. சூரியா

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பூர்வ புண்ணியம் பலன்தர...


நமது பூர்வ புண்ணியம் பலன் தர சர்வம் சக்திமயமாய் நிற்கும் அபிராமியை அன்பால் கட்டும் இப்பாடலை பாராயணம் செய்வோம்.

பாடல்
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

பொருள்: 
ஒளி பொருந்திய தன் அழகிய நெற்றியிலே கயல் போன்ற கண்ணைக் கொண்டு முக்கண்ணியாய் அருள் பாலிப்பவளே! விண்ணுலகில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து வந்தனம் செய்து அருள் பெற பேருவகையுடன் விரும்பும் எம் தாயை...ஒன்றுமறியா இந்த நாயேனின் பேதை நெஞ்சு, தேவருக்கும், மூவருக்கும், யாவருக்கும் காணக்கிடைக்காத கன்னியான உன்னை காணவேண்டும் என்று மிகவும் பாசத்துடன் பேராசைப்பட்டது......அவ்வாறு உன் அருள் பெற என் மனம் ஆசைப்பட்டதற்கு காரணம்....அந்த எண்ணம் எழக் காரணம் நான் முற்பிறவியில் செய்த புண்ணியம் தவிர வேறு என்னவாய் இருக்க முடியும்?..

இடரினும் தளரினும் உனது கழல் மட்டுமே தொழும் - மரு. ஜெ. சூரியா


சனி, 4 ஆகஸ்ட், 2012

கருவிகளைக் கையாளும் வலிமை பெற...


அன்னையே..  எல்லாம் நின் செயல்...நாம் வெறும் கருவி மட்டுமே...இந்தக் கருவி, கருவிகளை திறம்படக் கையாளும் வலிவு பெற இப்பாடலை பாராயணம் செய்து பயனுறுவோம்....

பாடல்
ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே

பொருள்:
எம்மை ஆள்வதற்கு உனது கமலம் போன்ற பாதங்கள் உள்ளன... உமது கமலம் போன்ற பாதம் பற்றினால் மூஉலகாளும் பேறு உண்டு.......நீ எம்மை ஆண்டால் யாம் மூஉலகாள்வோம்.....கடமை தவறாத பயங்கரமான பாசக்கயிற்றுடன் துரத்தும் யமனேஸ்வரனிடமிருந்து எம்மைக் காக்க உமது கடைக்கண் பார்வை உண்டு.....மார்க்கண்டேயரைக் காக்க சிவனார் காலசம்ஹார மூர்த்தியாக அவதாரமெடுத்து, யமனை வதைத்து மார்க்கண்டேயரை மீட்டார்....ஆனால் பாவியேனை மீட்க உமது ஒரு சிறிய விழியோர பார்வையே போதுமானது தாயே!......உம் தாள் எம்மை ஆளாமலிருப்பதற்கும், உம் கடைக்கண் பார்வை எம்மேல் படாமலிருப்பதிற்கும் காரணம் நானும் எனது பாவச்செயல்களும்  மட்டுமல்ல...பஞ்சமா பாதகங்கள் செய்த போதும் தஞ்சமென்று வந்து விட்டால் தானேற்றுக் காக்கும் எந்தாய் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ காளியம்மனாகிய நீ உமது சேயாகிய எமை மறந்ததும் கூட ஒரு காரணமாகும். அன்று முப்புரம் எரிக்க வில்லேந்தி தன் பார்வையினாலே திரிபுர தகனம் செய்த ருத்ரனின் இடப்பாகம் வாசம் செய்யும் அழகிய ஒளி வீசும் நெற்றியை உடைய அம்பிகையே...உம்மை வணங்குகின்றேன்...


மறையுடையானை தோலுடையானை வார்சடைமேல் வளரும் பிறையுடையானை போற்றி வணங்கும் நெறிவுடையான் - மரு. ஜெ. சூரியா





வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வேண்டியதை வேண்டியவாறு அடைய


அனைவருக்கும் ஏதாவது ஒரு விருப்பம் இருக்கும். அந்த விருப்பம் நிறைவேற.....வேண்டியதை வேண்டியவாறு அடைய.... இந்த பாடலை பாராயணம் செய்யுமாறு வேண்டுகின்றேன்.


பாடல்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.


பொருள் :
பவளக் கொடியில் நன்கு பழுத்த செம்பவளம் போன்று சிவந்த உதடுகளையும், அந்த உதடுகளினூடே வெண்முத்துக்கள் போன்று பிரகாசிக்கும் பற்களையும், எம் இதயத்தை குளிர வைக்கும் புன்முறுவலையும் உம் பலமாகக் கொண்டு உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியோன், தலைமாலை தலைக்கணிந்த பிரான், என் தலைவன் சர்வேஸ்வரனுடன் போரிட்டு, அந்த மகாதேவனின் மாதவத்தைக் கலைத்து, அவரை மகிழ்விக்கச் செய்த உடுக்கை போன்ற மெல்லிடையும், அந்த மெல்லிடையை சாய்க்கின்ற வகையில் ஒன்றுக்கொன்று துணையாய் அமைந்த தனங்களையும் உடையவளே! உமையே..உம்மை பணிந்தால் மட்டுமே தேவலோகமாளும் இந்திர பதவி திண்ணம் என்பதை உணர்ந்து உம்மை துதிக்கின்றோம்.... 


நால் வேத நாயகனின் கால் பாதம் பணியும் - மரு. ஜெ. சூரியா

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நவமணிகளைப் பெற ....



பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை...அருளொடு பொருள் சேர.....நவமணிகள் பெற்று நலமாய் வாழ பாராயணம் செய்வோம்.....

பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!


பொருள் :
தாயே, அடி முதல் நுனி வரை சுவை தரும் உனது நாமத்தை  போன்ற கரும்பையும், வாசம் வீசும் மலர்களையும் உனது கனகக் கரங்களில் அணிந்து அவைகளுக்கு அணி சேர்க்கின்றாய். செந்தாமரை போன்ற நின் செந்தூர மேனியில் வெண்ணிறத்தில் ஜொலிக்கும் முத்துமாலைகளை அணிந்துள்ளாய்....திருநீலகண்டனின் கண்டத்தை சுற்றி படமெடுக்கும் கொடும் நஞ்சுடை நாகப்படம் போன்ற உன் மெல்லிடையில் நாக மாணிக்கம் போன்ற விலை மதிப்பற்ற நவரத்தின மணிகளையும், பார்த்தவர் கண்கவர் வண்ணப்பட்டாடையும் அணிந்துள்ளாய்...எட்டுத் திசைகளையும் அவற்றை ஆளும் அஷ்ட திக்பாலர்களான கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு- ஈசான்யன் எனும் தேவர்களையும் தனது உடமையாக அணிந்து, சகல செல்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள என்னப்பன் ஆலவாயனின் இடப்பாகம் சேர்ந்து பாகம் பிரியாளாய் பக்தர்களின் சோகம் களைகின்றாய்....




முப்புறமெரித்தானை முக்கண்ணனை முந்தைவினை ஓய்வோனை முக்காலமும் நினைந்துருகும் - மரு. ஜெ. சூரியா

திங்கள், 19 மார்ச், 2012

பழைய வினைகள் வலிமை பெற....


மீண்டும் ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு...ஆலவாய் அண்ணலாம்...சொக்கநாதர் அருள்புரியும்.....அங்கையர்கண்ணி மீனாட்சி ஆட்சி புரியும் நான்மாடக் கூடலாம் மதுரை மாநகரிலிருந்து எம் பணியை தொடர்கிறேன்.....நம் பழவினைகள் வலிமை பெற பாராயணம் செய்து பயனுறுவோம்....

பாடல்:
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

பொருள்:
இம்மையில் நன்மை பெற தேவையான பொருட்செல்வமாய் இருப்பவளே!...அந்தப் பொருட்களினால் உண்டாகும் சுகமாகிய பொகங்களாகவும் இருப்பவளே!....அதுமட்டுமில்லாமல் அந்த போகங்களை அனுபவிக்கும் போது ஏற்படும் மதிமயக்கமாகவும் இருப்பவளே!...அது மட்டுமா....அந்த மயக்கத்திலிருந்து எம்மை துய்க்கும் தெளிவாகவும் இருப்பவளே!....அன்னையே...என் மனத்தை வஞ்சிக்கும் மாய இருளை அகற்றும் ஒளி வெள்ளமாக உனது அருளை வாரி வழங்கும் மாரியே!....உன்னருளை விவரிக்க சொல்லொன்று அறியேன் நான்...கமலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் அபிராமி அம்பிகையே....


பொருள் - போகம் - மருள் - அருள் -தெளிவு...எல்லாம் நீயே......

கூடல் குருமணியை கருவிழியில் சுமக்கும் ஜெ. சூரியா