வையம் வசப்பட...அஷ்ட சித்திகள் பெற......அம்மை அருளிட...இப்பாடலை பாராயணம் செய்யுங்கள்...
பாடல்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே
பொருள்
அட்டமாசித்திகள் எனும் 1. அணிமா (உடலைப் பஞசினும் ஒய்யதாக மாற்றி பிறர் கண்களுக்குத் தோன்றாது மறைத்தல்), 2. மகிமா (உடலை புதாகாரமாகத் தோன்றச் செய்தல்) 3. கரிமா (உடலை யானையைப் போன்று கனமாக்குதல்) 4. லகுமா (உடலை தக்கையைப் போல் இலேசாக்குதல்) 5. பிராப்தி (தமது ஆற்றலால் வெயில் மழை முதலிய கால நிலைகளை மாறச் செய்தல்)6. பிரகாமியம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல்) 7. ஈசத்துவம் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்தல்) 8. வசித்துவம் (தெய்வங்களைத் தன் வயப்படுத்துதல்) எனும் எட்டு வகையான அபூர்வ சக்தியானவளே! சக்தியாய் ஆனது மட்டுமல்லாமல் நின்னடி போற்றும் அடியார்க்கு, அந்த அஷ்ட சித்திகள் கைக்கூட காரணமாயிருக்கும்..சக்திகளில் தலைசிறந்த சக்தியாய்...பராசக்தியாய் விளங்குபவளே! முதல் மூவரையும் பெற்றவளே! உன்னில் உருவான சிவம் மூலம் உன்னை எண்ணித் தவமியற்றுபவர்க்கு பிறவா வரம் தந்து, மோட்ச வீடுபேறடையும் எண்ணமும், அந்த எண்ணத்தை செயலாக்கும் வண்ணம் எம் சிந்தையில் அமர்ந்து நல்வழி காட்டி, எம் எண்ணங்களை சுத்தி செய்து எம்மை என்றும் இமைபோல் காக்கும் உமையவளே!...
நிலையாமை பேசி நிலைத்து நின்ற பட்டினத்தான் பாதம் பற்றும் -ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக