எல்லோருக்கும் தலைமைப் பொறுப்பேற்க ஆசை இருக்கும். அந்த நினைவை நிஜமாக்க பாடுங்கள் இந்த பாடலை.....
பாடல்
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
பொருள்
விண்ணுலகம் வாழும் தேவர்களும், அசுரர்களும் என்றும் உன்னை வணங்கியபடியே இருக்கின்றனர். கமலத்திலமர்ந்த வேதப்பரம்பொருள் நான்முகனும், அவதார நாயகன் நாராயணனும் என்றும் உன்னை சிந்தித்தபடியே இருக்கின்றனர். அழியாத ஆனந்தமளிக்கும் பரம்பொருள் சர்வேஸ்வரன் தனது தூய அன்பால் என்றும் உன்னைக் கட்டி போட்டபடி இருக்கின்றார். ஆனாலும் இவர்களைக் காட்டிலும் இந்த பூவுலகில் உம் திருவடி பணிவோர்க்கு மட்டும் என்றும் உன் கருணையும் அருளும் எளிதாகக் கிடைக்கின்றது. எம் தலைவியே இது மிகவும் வியப்பிற்குரிய ஒன்றாகும்.
ஆலகாலம் உண்டானைக் காலம் காலமாய் கொண்டாடும் - ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக