இதைப் பாராயாணம் செய்வதே பேரின்பம்....
பாடல்
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
பொருள்
நான் விரும்பி வேண்டிக் கேட்டவுடன், அண்ட சராசரங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்த நீ...அரவோடு உறவாடும் என்னப்பனோடு திருமணக் கோலத்தில் திருவருள் புரிய காட்சி கொடுத்தாய். வான்வெளியில் மீன்விழி கொண்டு, நீ நின்ற கோலம் கண்டு என் இதயமும், கண்களும் கரையிலா...கரைபோட இயலா காட்டாற்று வெள்ளமென இன்பம் அடைந்தன. எல்லையிலா இன்பமடையும் போது சித்தம் தடுமாறுமென்பது நியதி. ஆனால் உன்னக் கண்டதும் என் சித்தத்தில் தெளிந்த ஞானம் கைவரப்பெற்றது கண்டேன். இவ்வாறு நிகழக் காரணம் உனது திருவுளமின்றி வேறெதுவுமுண்டோ? நவராத்திரி நீ...நவசக்தி நீ....எமக்கு நல்லது செய்ய நாகப்படம் சூடிய நவகோள் நாயகியும் நீ !
ஏனோ தெரியவில்லை..இதை எழுதும் போது எனக்குள் ஒரு சிலிர்ப்பு....
ஆட்கொள்ள நீ...அடிபேண நான்...
தாண்டவமாடும் ஆண்டவனின் அடிதேடி ஓடும் - ஜெ.சூரியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக