சஞ்சலங்களை அஞ்சாமல் சந்திக்க இப்பாடல் பாடுவோம்...
பாடல்
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
பொருள் :
அழகுக்கு அழகுசேர்க்கும் பேரழகியான உன் திருவுருவம் மட்டுமே என் உள்ளமெங்கும் நிறைந்துள்ளது. வேறு எந்த உலக நிகழ்வும் என் மனதில் நான் கொள்ளவில்லை...உனது அடி தொழும் அடியார் கூட்டத்தை மட்டுமே விரும்பி நாடுவேன்...பிறவாநிலையளிக்கும் உன் சமயத்தை தவிர வேறு எந்த சமயத்தையும் விரும்ப மாட்டேன்....மூவுலகும் நீயாகி....மூவுலக்குள்ளும் நீயாகி...பிரபஞ்சத்தின் அகமும்...புறமுமாய்..அண்ட வெளியாய் நின்று இயக்குபவளே! என் உள்ளத்தில் கள்ளைப் போன்று மயக்கமும் அமுதம் போன்று இனிமையும் சேர்த்து என்னை மீளா அடிமை கொண்டவளே! எல்லாவித இன்பமுமாய் ஆகி..எம்மை அனுபவிக்க வைக்கும் இன்பமயமானவளே! ஆனந்த சொரூபியே! கடையேன் மேல் கருணை பூத்த என் கண்ணின் மணி போன்றவளே!...
சொக்கநாதனை சிந்தையில் சிக்க வைத்த-ஜெ. சூரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக