அல்லல் அறுபட..தொல்லை விடுபட....பிறவிப் பிணிதீர...சொல்லுங்கள் இப் பாடலை...
பாடல்
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
பொருள்
பாசமுள்ள பக்தர்களைத் தேடி படரும் கொடிபோன்றவளே! வஞ்சியின் இளமையான கொம்பைப் போன்று மென்மையானவளே!
வேதங்களின் சுகந்த மணமாயிருக்கும் சாரமே! பனியுருகும் மென்மையான இமயத்தில் உதித்த சர்வ பலம் பொருந்திய பெண் யானையைப் போன்றவளே! தேவரையும், சதுர்முகன், சக்ரதாரன், சதாசிவன் எனும் மூவரையும் பெற்ற அன்னையாய் இவ்வுலகை உய்விக்கும் ஆதிபராசக்தி தாயே! உன்னடியே கதியெனும் இந்த கடையேன் இறந்தபின் பிறவிச்சூழலில் சிக்காமலிருக்க, சிவனிடம் இடம் பெற்ற நீ உன் காலடியில் எனக்கு ஓரிடம் தந்து ஆட்கொள்ளல் வேண்டும்....
தாயிற் சிறந்த தயாஆன தத்துவனைத் துதிக்கும் நாயிற்
கடையான் - - ஜெ. சூரியா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக