எண்ணங்கள் ஈடேற வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் பெற இப்பாடலை வைராக்கியத்துடன் படிப்போம்
பாடல் :
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
பொருள்:
ஈரேழு பதினான்கு உலகங்களையும் பெற்றவளே! பெற்றதோடு மட்டுமல்லாமல் அவற்றை தாயுள்ளத்துடன் காப்பவளே! பின் அவற்றை உன்னுள்ளே மறைப்பவளே! முக்காலமுமாய் நின்று முத்தொழில் புரிபவளே! பாற்கடல் நஞ்சை கண்டத்தில் நிறுத்தி, என்னப்பனின் கண்டத்தையும் நிறுத்தி திருநீலகண்டமாக்கியவளே! பிறைகொண்ட சிரசும்....கறை கொண்ட கழுத்தும் கொண்ட எம் சுடலைக்காட்டரசனுக்கும் மூத்தவளே! என்றும் மூப்பிலா, பாற்கடல் வாசனாம் அரங்க நாயகி மணாளன், சோலை அழகனாம் திருமாலிற்கு இளையவளே! மாதவம் புரிபவளே! உன்னைத்தவிர மற்றோர் இறையை இறைஞ்சுவேனோ?...
கச்சி ஏகம்பனை உச்சியில் சுமக்கும் - ஜெ. சூரியா
in the third line- moova mugantharku ilaoyavale- in that book its written that abirami wont get ageing for the word moova... and its not mentioned for vishnu...
பதிலளிநீக்குசீதா...மூவா முகுந்தற்கு என்றால் என்றுமே இளமையாக இருக்கும் பெருமாளுக்கு இளையவளே என்று நான் பொருள் படுத்தியுள்ளேன். அது அம்மைக்கும் பொருந்தும். அண்ணனுக்கு மூப்பில்லையென்றால் தங்கைக்கு எங்கிருந்து மூப்பு வரும்? ஆகவே என்றும் இளமையுடன், மூப்பில்லாத நீ முகுந்தனுக்கு த்ங்கையாக உள்ளாய் எனவும் பொருள் கொள்ளலாம். அபிராமி அந்தாதி ஒரு கடல். மீண்டுமொருமுறை படித்தால் இன்னொரு பொருள் தோன்றும். அம்மையின் அருளும் தோன்றும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் என் எழுத்துக்கு மின்னூட்டங்கள்....